/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுபாலத்தில் தேங்கும் செடி, கொடிகளால் விவசாயம் பாதிப்பு
/
கல்லுபாலத்தில் தேங்கும் செடி, கொடிகளால் விவசாயம் பாதிப்பு
கல்லுபாலத்தில் தேங்கும் செடி, கொடிகளால் விவசாயம் பாதிப்பு
கல்லுபாலத்தில் தேங்கும் செடி, கொடிகளால் விவசாயம் பாதிப்பு
ADDED : அக் 15, 2024 07:20 AM
குளித்தலை: குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குளங்கள் நிரம்பி வருகிறது. மேலும்,அய்யர்மலை, வீரவள்ளி, கோட்டமேடு, சிவாயம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை தண்ணீர் முழுவதும் கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக வெளியேறி, இரணியமங்கலத்தில் உள்ள செட்ரஸ் மூலம் சிவாயம் காட்டு வாரியிலும், கொடிங்கால் வடிகால் வாய்க்காலிலும் செல்கிறது.
சிவாயம் காட்டு வாரி மற்றும் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் இரண்டும், மேட்டுமருதுார் கல்லுப்பாலத்தில் இணைகிறது. இந்த பாலத்தில் வெளியேறும் தண்ணீர் கண்மாயில்கள், ஒன்றரை மீட்டர் அகலம் மட்டும் இருப்பதால் செடி, கொடியள் கண்மாயை அடைத்து கொள்கிறது. இரண்டு வாய்க்காலில் வரும் மழை தண்ணீர் வெளியேற முடியாததால் மேட்டுமருதுார், மருதுார், ராஜேந்திரம், பரளி, பணிக்கம்பட்டி, கூடலுார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி நிற்கிறது. மேட்டுமருதுார் கல்லுபாலத்தில் தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்ற பொது பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.இதுகுறித்து பொதுபணித்துறை எஸ்.டி.ஓ., கோபிகிருஷ்ணன் கூறுகையில்,''மேட்டுமருதுார் கல்லு பாலத்தில் தேங்கியுள்ள செடி, கொடிகளை அலுவலக பணியாளர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

