/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு
/
பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு
பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு
பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு
ADDED : செப் 20, 2025 02:09 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து, கூடலுார் வழியாக கிளை வாய்க்கால் செல்கிறது.
இந்த பாசன வாய்க்கால் மூலம் மேட்டுமருதுார் மேல வயல் பகுதியில், 500 ஏக்கர் பரப்பளவில் நெல், கோரை, வாழை விவசாயம் செய்கின்றனர். இந்த நிலத்திற்கு வரும் பாசன தண்ணீர் மற்றும் வடிகால் கண்ணாறு துார்ந்து போனதால், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருந்து வருகிறது.
மேலும் மழை தண்ணீர் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் தேங்கி நிறக்கிறது. இதனால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்காத வகையில், பாசன கண்ணாறு மற்றும் வடிகால் கண்ணாறுகளை துார் வாரவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.