/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., 54வது ஆண்டு விழா; கரூரில் கொண்டாட்டம்
/
அ.தி.மு.க., 54வது ஆண்டு விழா; கரூரில் கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2025 01:14 AM
கரூர், கரூர்
மாவட்ட அ.தி.மு.க., சார்பில், 54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, லைட்
ஹவுஸ் கார்னரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு, மாலை அணிவிக்கும் விழா
நேற்று நடந்தது.
முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்.,
ஜெயலலிதா சிலைகளுக்கு, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான
விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, பொது
மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
அப்போது, மாவட்ட அவைத்தலைவர்
திருவிகா, துணை செயலர் மல்லிகா, ஜெ.,பேரவை செயலர் நெடுஞ்செழியன்,
எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துகுமார், ஒன்றிய செயலர்கள்
கமலகண்ணன், கலையரசன், ஈஸ்வர மூர்த்தி, பகுதி செயலர் சுரேஷ், பேரூர்
செயலர் இளமதி உள்பட பலர் உடனிருந்தனர்.