/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய பஸ் ஸ்டாண்டில் குறைவாக வாடகை நிர்ணயம்; அ.தி.மு.க., புகார்
/
புதிய பஸ் ஸ்டாண்டில் குறைவாக வாடகை நிர்ணயம்; அ.தி.மு.க., புகார்
புதிய பஸ் ஸ்டாண்டில் குறைவாக வாடகை நிர்ணயம்; அ.தி.மு.க., புகார்
புதிய பஸ் ஸ்டாண்டில் குறைவாக வாடகை நிர்ணயம்; அ.தி.மு.க., புகார்
ADDED : ஆக 07, 2025 01:24 AM
கரூர், கரூர் மாநகராட்சி கூட்டரங்கில், கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்:
தினேஷ்குமார் (அ.தி.மு.க.,): கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமையவுள்ள இடத்தில், கடைகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட் கடைகளை விட, குறைவான தொகையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மேயர் கவிதா: கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் டெண்டர் விடுவதில், எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை. இதுபோன்ற தவறான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். கடந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், மக்கள் செலுத்த முடியாத அளவிற்கு, 150 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது.
கமிஷனர் சுதா: பொதுப்பணிதுறை, சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்டையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணை வழிகாட்டுதல்படி, வாடகை நிர்ணயம் மற்றும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஸ்டீபன்பாபு (காங்.,): கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் ஐந்து கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இலவச கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர் சுதா: கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இரண்டு இலவச கழிப்பறை கட்டப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தண்டபாணி (மா.கம்யூ.,): கரூர் மாநகராட்சியில் துாய்மையாளர்களுக்கு, 791 ரூபாய் தினமும் கூலி, கரூர் கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் எடுத்துள்ள நிறுவனம், 400 ரூபாய் கூலி வழங்குகிறது. பணியாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., அட்டை கொடுப்பதில்லை.
மேயர் கவிதா: இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து சாதாரண, அவசர கூட்டத்தில் மொத்தம், 113 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.