/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
குளித்தலையில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 06, 2025 05:45 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் நேற்று சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பூத் ஏஜென்ட்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலர் வக்கீல் இளங்குமரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் கருணாகரன், மணிகண்டன், பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர்
பேசுகையில்,'' வரும் தேர்தலிர் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து வெற்றிக்கு உழைத்திட வேண்டும்,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் சின்னசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய. நகர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.