/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 20, 2025 01:57 AM
கரூர் அ.தி.மு.க.,வை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி, கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
கரூர் ஊராட்சி ஓன்றிய முன்னாள் கவுன்சிலர் கஸ்துாரி, காதப்பாறை பஞ்சாயத்து செம்மலர் நகர் கிளை செயலாளர் மாருசாமி உள்பட பலர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.
மேலும் கரூர் மாநகராட்சி, 30வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் மனோஜ்குமார், சுரேஷ் குமார், யோகித்ராஜ் ஆகியோரும் தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., கரூர் ஊராட்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, கரூர் மாநகராட்சி பகுதி செயலர் குமார், கரூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.