/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் கஸ்டடியில் கோவில் ஊழியர் மரணம் நீதி கேட்டு அ.தி.மு.க., ஐ.டி.விங் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 01, 2025 01:01 AM
கரூர், போலீஸ் கஸ்டடியில் இறந்த கோவில் ஊழியர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு, கரூர் அ.தி.மு.க., அலுவலகம் முன், கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தரின் காரில், தங்க நகை மாயமான விவகாரத்தில், போலீசார் விசாரணையின் போது கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, உயிரிழந்தார். போலீசாரின் தாக்குதலால் அஜித்குமார் மரணம் அடைந்து தொடர்பாக, ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என, 'ஜஸ்டிஸ் அஜித்குமார்' என்ற பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மண்டல துணை தலைவர் பசுபதி செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.