அ.தி.மு.க., கரூர் எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி
அ.தி.மு.க., கரூர் எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி
ADDED : ஜூன் 15, 2026 03:53 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வேம்பு மாரியம்மன் கோவில் தெரு, சர்ச் கார்னர், பசுபதிபாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களுக்கு, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று திறந்த வெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது, பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்பளித்தனர்.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலர் பசுவை சிவசாமி, கரூர் மாநகர பகுதி செயலர்கள் சுரேஷ், சேரன் பழனிசாமி, தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
