ரூ.1.21 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி: கலெக்டர் ஆய்வு
ரூ.1.21 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 15, 2026 03:53 AM
கரூர்:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கொடையூர் பஞ்., ரங்கபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 50 ரூபாய் மதிப்பீட்டில் மரகன்றுகள் பராமரிப்பு பணி, 6.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக மரக்கன்றுகள் வளர்ப்பு பணி, சீத்தப்பட்டி பழைய காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 1.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி, 48.26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.மலைக்கோவிலுாரில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக கட்டடம் பராமரிப்பு பணிகள் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், இரண்டு வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகள் என, மொத்தம், 1.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
