/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
/
மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
ADDED : நவ 28, 2024 01:10 AM
மாமன்ற கூட்டத்தில்
அ.தி.மு.க., வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
ஈரோடு, நவ. 28-
ஈரோடு மாநகராட்சி கூட்டத்தை நடத்த, மேயர் காலதாமதப்படுத்தியதால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று காலை, 10:30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என பலரும் சரியான நேரத்தில் அலுவலக கூட்டரங்கில் காத்திருந்தனர். ஆனால், மேயர் அறையில் கூடியிருந்த மேயர் நாகரத்தினம் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் கொண்டாடுவதில் மும்முரமாக இருந்தனர். இதனால், அவர்கள் கூட்டத்துக்கு வரவில்லை.
ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பொறுமையிழந்த, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில், கூட்டம் தொடங்காமல் தாமதம் செய்வதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். பின், 12.30 மணிக்கு மேயர் நாகரத்தினம் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து கூறுகையில்,'' மக்களின் குறைகளை தீர்க்கும் மாநகராட்சி கூட்ட அரங்கமா? இல்லை உதயநிதி பிறந்த நாளை கொண்டாடும் அரங்கமா,'' என்றார்.
இதனிடையே, 11:20 மணியளவில் கேக்குடன் வந்த மேயர் நாகரத்தினம் காத்திருந்த, அ.தி.மு.க., மூன்றாவது வார்டு கவுன்சிலர் நிர்மலா தேவிக்கு, கேக் ஊட்டி விட்டு மீண்டும், தன் அறைக்கு சென்று அங்கிருந்த தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கேக் வழங்கினார்.