/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க., வினர் அஞ்சலி
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க., வினர் அஞ்சலி
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க., வினர் அஞ்சலி
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க., வினர் அஞ்சலி
ADDED : டிச 25, 2024 02:12 AM
கரூர், டிச. 25-
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், நினைவு நாள், கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அ.தி.மு.க., நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின், 37 வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. கரூர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் சார்பு அணிகள் சார்பில், 100 க்கும் மேற்பட்ட இடங்களில், எம்.ஜி. ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன் உள்பட அ.தி.மு.க., வினர் பலர் உடனிருந்தனர்.
* கரூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், மனோகரா கார்னரில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் கணேசன், துணை செயலாளர் ஐயப்பன், பொருளாளர் ஓம்சக்தி சேகர், ஐ.டி., விங்க் செயலாளர் அன்பு, நகர செயலாளர் அன்பழகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
*அரவக்குறிச்சி நகர அ.தி.மு.க., சார்பில் ஏ.வி.எம்., கார்னர் பகுதியில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு, நகரச் செயலாளர் இளமதி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்டோரும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளபட்டி அ.தி.மு.க., சார்பில் நகரச் செயலாளர் சாதிக் அலி மற்றும் நிர்வாகிகள் பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்து எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.