/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயிரிழந்த 41 பேருக்கு அ.தி.மு.க., அஞ்சலி
/
உயிரிழந்த 41 பேருக்கு அ.தி.மு.க., அஞ்சலி
ADDED : அக் 07, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,ன் எழுச்சி பயண பிரசாரத்துக்கு, கடுமையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த, 41 பேருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், மாநில அமைப்பு செயலர் சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.