/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அவுட் சோர்சிங் முறை ரத்து கோரி ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் வலியுறுத்தல்
/
அவுட் சோர்சிங் முறை ரத்து கோரி ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் வலியுறுத்தல்
அவுட் சோர்சிங் முறை ரத்து கோரி ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் வலியுறுத்தல்
அவுட் சோர்சிங் முறை ரத்து கோரி ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் வலியுறுத்தல்
ADDED : டிச 20, 2024 12:56 AM
கரூர், டிச. 20-
போக்குவரத்து கழகத்தில், அவுட் சோர்சிங் முறை ரத்து செய்ய வேண்டும் என, ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கரூர், திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பஸ் டிரைவர், கண்டக்டர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்காமல், அவுட் சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம் என்பதால், இந்த முறையை கைவிட வேண்டும்.
ஓய்வு பெற்ற அனைவருக்கும், அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.