/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை தேவை
/
அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை தேவை
அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை தேவை
அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை தேவை
ADDED : செப் 30, 2025 01:37 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கரூர்,- திண்டுக்கல் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வதில்லை. கடைவீதி பஸ் நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதனால் அப்பகுதியில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
கடைவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒன்றரை கி.மீ., துாரம் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இல்லையென்றால் ஆட்டோவில்தான் வரவேண்டிள்ளது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.