/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு
/
ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு
ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு
ஆகாயத்தாமரையால் நீரோட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு
ADDED : நவ 20, 2024 01:57 AM
கரூர், நவ. 20-
கரூர் வழியாக செல்லும், அமராவதி பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளால் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு, கரூர் நகர் வழியாக பாய்ந்தோடி திருமுக்கூடலுார் என்ற இடத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இதில், கரூர் அருகில் செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து பாசன பகுதிகளுக்கு பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன்மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடக்கிறது. ஆண்டாங்கோவில், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசுகாலனி பகுதிகள், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜ வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறுகிறது.
கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் ஆகாயத் தாமரைகள், குப்பை சேர்ந்து காணப்படுவதால், அதன் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பஞ்., மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்தும் சாயக்கழிவுநீர் வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கழிவுநீர் கலந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பாய்வதால், அவை மலட்டு தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தற்போது பலர், விவசாயத்தை விட்டு வெளியேறி வருவதால், விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறி வரும் அவல நிலை தொடர்கிறது. இது குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டாலும், பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கிறோம் என, சொல்வதோடு முடித்து
கொள்கின்றனர்.
ஆறு, வாய்க்கால் மாசுபடுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.