/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் விற்பனையாளர்களுக்கு மாற்று பணி முழு நேர ரேஷன் கடைக்கு 15 நாட்கள் 'லீவு'
/
ரேஷன் விற்பனையாளர்களுக்கு மாற்று பணி முழு நேர ரேஷன் கடைக்கு 15 நாட்கள் 'லீவு'
ரேஷன் விற்பனையாளர்களுக்கு மாற்று பணி முழு நேர ரேஷன் கடைக்கு 15 நாட்கள் 'லீவு'
ரேஷன் விற்பனையாளர்களுக்கு மாற்று பணி முழு நேர ரேஷன் கடைக்கு 15 நாட்கள் 'லீவு'
ADDED : அக் 31, 2025 12:34 AM
கரூர், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, மாற்று பணி வழங்கப்பட்டதால், முழு நேர கடைகளுக்கு மாதம், 15 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை  நிர்வாகத்தின் கீழ் கரூர், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், 23 ரேஷன் கடைகளில், 15,843 அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகின்றன. இங்குள்ள விற்பனையாளர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டதால், ரேஷன் கடைகள் சரியாக திறக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மொத்த விற்பனை பண்டசாலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:
மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ், 23 ரேஷன் கடைகளில், 23 விற்பனையாளர்கள் உள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையால் அலுவலகம், கிடங்கு ஆகிய பணிகளுக்கு, 10 விற்பனையாளர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டுள்ளது. 13 விற்பனையாளர்களை வைத்து, 23 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.  23 கடைகளும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் பொருட்களை வாங்குவதில் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, முழு நேர கடைகளை அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர், கூறினார்.
இது குறித்து, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்-பதிவாளர் அபிராமியிடம் கேட்ட போது, ''மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ், கடைகள் முறையாக திறக்கவில்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

