/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை
அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை
அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 10, 2025 02:08 AM
கரூர்: மழைக்காலம் தொடங்கிய நிலையில், அமராவதி ராஜ வாய்க்-காலை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
கரூர், அமராவதி ஆற்றின் பிரதான வாய்க்கால் ராஜ வாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகி-றது. கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மழை இல்லாத போதிலும் தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரு-கிறது. தற்போது வாய்க்கால் செல்லும் பாதையை துார்வாரினால் மழைநீர் வரும்போது தடையில்லாமல் செல்ல முடியும். மேலும், ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக வாய்க்காலில் சென்று விவசாயத்திற்கு பயன்படும். இதை கருத்தில் கொண்டு விரைவில் துார்வார வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.