/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருமாநிலையூர் ரவுண்டானாவில் செயல்படாத சிக்னலால் சிரமம்
/
திருமாநிலையூர் ரவுண்டானாவில் செயல்படாத சிக்னலால் சிரமம்
திருமாநிலையூர் ரவுண்டானாவில் செயல்படாத சிக்னலால் சிரமம்
திருமாநிலையூர் ரவுண்டானாவில் செயல்படாத சிக்னலால் சிரமம்
ADDED : நவ 10, 2025 02:08 AM
கரூர்: கரூர் மாநகராட்சி, திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட், கடந்த அக்., 6 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த வரை, திருச்சி, மணப்-பாறை, குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்கள் மட்டுமே திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக வந்து சென்றன. தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பஸ்களும் திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக செல்கின்றன. இதனால் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரத்தில் பள்ளி வாக-னங்கள் வருவதால், போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாக-னங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.
ஆனால், திருமாநிலையூர் ரவுண்டானா போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பொருத்தப்பட்ட நாள் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரியவில்லை. தற்போது பல விளக்குகள் பழுதடைந்து காண்ப்படுகிறது. இங்கு, சிக்னல் பயன்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்ப-டுத்த முடியும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

