ADDED : ஆக 21, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்
தோட்டம், அந்தரப்பட்டி, கோவக்குளம், பிச்சம்பட்டி, தாராபுரத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்து வருகின்றனர்.
விளைந்த வெண்டைக்காய்களை அறுவடை செய்து கரூர், திருச்சி மற்றும் உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.தற்போது, மழைக்காலம் என்பதால் வெண்டைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிந்து, கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.