/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழா வேப்ப மர வாகனத்தில் அம்மன் உலா
/
மாரியம்மன் கோவில் திருவிழா வேப்ப மர வாகனத்தில் அம்மன் உலா
மாரியம்மன் கோவில் திருவிழா வேப்ப மர வாகனத்தில் அம்மன் உலா
மாரியம்மன் கோவில் திருவிழா வேப்ப மர வாகனத்தில் அம்மன் உலா
ADDED : ஜூன் 03, 2025 01:07 AM
கரூர், வைகாசி திருவிழாவையொட்டி, கரூர் மாரியம்மன் கோவிலில், வேப்பமர வாகனத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கரூர் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. பின், தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல்
, கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த, 28ல், முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நடந்தது.நேற்று வேப்பமர வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
இன்று பின்னமர வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 4ல் புஷ்ப அலங்காரம், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல், 8ல் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.