/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிலத்தை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயற்சி

ADDED : ஜன 30, 2024 03:22 PM
கரூர்: நிலத்தை மீட்டு தரக்கோரி, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில், கரூர் தான்தோன்றிமலையை சேர்ந்த அமுதா, 45, என்ற பெண் மனு கொடுக்க வந்த போது, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர்.அப்போது அவர் கூறியதாவது:நான் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான கிருஷ்ணராயபுரத்தில் உள்ள, 43 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தோம். அதை, கரூர் ஆண்டாங்கோவிலை சேர்ந்த ஒருவர் வாங்கினார். 18 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள நிலத்திற்கு, மூன்று லட்சம் முன் பணமாக அளித்தார். பத்திரப்பதிவு முடிந்த பின், மீதமுள்ள தொகை தருவதாக கூறினார். ஆனால் பத்திரப்பதிவு முடிந்த, எட்டு ஆண்டுகள் கடந்தும் பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இது குறித்து, கரூர் எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், நிலத்தை திருப்பி தருவதாக எழுதி தந்தார். இதுவரை நிலத்தை எழுதி கொடுக்கவில்லை. இந்நிலையில், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், பணம் கேட்டு மிரட்டு வருவதாக புகார் அளித்துள்ள அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.