ADDED : டிச 19, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, டிச. 19-
அரவக்குறிச்சியில், ஞாபக மறதி நோயால் மூதாட்டி மாயமானார்.அரவக்குறிச்சி அடுத்த வேலஞ்செட்டியூர் அருகே உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை மனைவி லட்சுமி, 74. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொண்டும், வயது மூப்பு காரணமாக உரிய பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், வீட்டிலிருந்த லட்சுமி நேற்று மாயமானார். அவர் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, லட்சுமியின் மகன் சிவக்குமார் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூதாட்டியை தேடி வருகின்றனர்.