ADDED : செப் 04, 2026 06:22 AM

அ நிறம் | அளவு
கரூர்:கிருஷ்ணராயபுரம்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கட்டளையில் பொதுமக்கள்
பயன்பாட்டுக்கு போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி
வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் மின் பெட்டி உள்ளது.
இந்த
பெட்டியில் கதவு இல்லாமல் திறந்து கிடக்கிறது. மின் பெட்டியில் உள்ள
'பியூஸ் கேரியர்' மற்றும் மின் ஒயர்கள் வெளியே தெரிகின்றன. இதை
எதிர்பாராத விதமாக தொட்டால், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும்
சூழல் உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு
உள்ளது. எனவே, மின் பெட்டியை சீரமைத்து மூடி வைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
