ADDED : செப் 04, 2026 06:22 AM

கரூர்:ஈரான்
போர் காரணமாக, வாகன எரிவாயு விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு
உயர்ந்துள்ளது. மேலும் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய
மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவிலிருந்து, வெங்காய வரத்து
குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் விலை உயர்த்துள்ளது.
வெங்காய
விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மை
கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு
மூலமாக வெங்காயம் கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான முறையில்
விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி 1 கிலோ வெங்காயம், 35
ரூபாய்க்கு நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும்
என, சட்டசபையில் உணவுபொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
இதையடுத்து
நேற்று, 142 முழுநேர நகர் புற ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை
துவங்கியுள்ளது. கரூர் மண்டலத்திற்கு, 15,000 கிலோ ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை ஒன்றுக்கு, 1 கிலோ வெங்காயம்
மட்டுமே தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
