/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 18, 2024 03:36 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த இனுங்கூர் பஞ்., காகப்பட்டி காமராஜ் நகரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்த, ஊர் மக்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த, 16ல் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்-துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட, இரண்டு கால யாக வேள்வி பூஜை செய்தனர். நேற்று காலை, புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளம் மூலமாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க, புனித நீரை கலசத்திற்கு ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர். பின், பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.