/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நொய்யலில் பாதையை மறித்த அங்கன்வாடி கட்டுமான பணி
/
நொய்யலில் பாதையை மறித்த அங்கன்வாடி கட்டுமான பணி
ADDED : நவ 19, 2024 01:31 AM
நொய்யலில் பாதையை மறித்த
அங்கன்வாடி கட்டுமான பணி
கரூர், நவ. 19-
அங்கன் வாடி புதிய கட்டுமான பணியில் பாதை மறித்து படிக்கட்டுகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நொய்யல் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்புபாளையம் பஞ்.,க்குட்பட்ட நொய்யலில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த கட்டடத்தில் வடக்கு பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கப்படுகிறது. அந்த படிகட்டு கட்டும் இடத்தில், எங்கள் வீடுகளுக்கு செல்லும் பாதை உள்ளது. அதில், 10 அடி அளவுக்கு பாதை மறித்து கட்டுவதால், இரண்டு சக்கர வாகனம் கூட செல்ல முடியாது. இதனால், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட தெருவுக்குள் வர முடியாத நிலை ஏற்படும். மற்றொரு புறம் படிக்கட்டுகள் அமைத்தால் எவ்விதமான போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

