/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 17, 2026 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்; தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவி-யாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
அதில், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில், பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும், அரசு ஊழியராக அறி-விக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக, 10 லட்ச ரூபாய், உதவியா-ளர்களுக்கு, 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்-பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் கமல கன்னி, மாவட்ட தலைவர் பத்மா தேவி, அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சிலர் கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்.

