/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 03, 2025 01:05 AM
கரூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், கூடுதல் பொறுப்பு மையங்களை கவனித்து கொள்ள மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும், கடந்த டிசம்பர் மாதத்துக்கான பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், துணைத்தலைவர் சுப்பிரமணி, செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சரவணன், தண்டபாணி, தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.