பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2026 07:26 AM

கரூர்,:கரூர்
தான்தோன்றிமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்
முன், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர்
சுமதி தலைமை வகித்தார். அடிப்படை ஊதியம், 18 ரூபாய் ஆயிரம் வழங்க
வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம்
செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக, 10 லட்சம்
ரூபாய் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்பி, இரட்டை பணிச்சுமையை குறைக்க வேண்டும். 10
ஆண்டுகள் பணி நிறைவு செய்தோருக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு
பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் ராதிகா, செயலர் வெற்றிசெல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
*
குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி
ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய
தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். செயலாளர் முத்தம்மாள் மற்றும்
பொறுப்பாளர்கள் பேசினர். மாவட்ட தலைவர் வாசுகி சங்க செயல்பாடுகள்,
கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
