பாதாள சாக்கடை மூடி சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பாதாள சாக்கடை மூடி சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 25, 2026 07:27 AM

அ நிறம் | அளவு
கரூர்,:கரூர்
மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அதில் அடைப்பு மற்றும் சாக்கடை கழிவுகள் வெளியேறும்போது, சரி செய்ய
சாலையில் வட்ட வடிவில், துவாரம் போடப்பட்டு, சிமென்ட் மூடி
பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி
பகுதியில், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்துள்ளன.
மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆசாத் சாலையில் மூடி சேதமாகி சாலையில்
பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி
விழுகின்றனர். வாகனங்களின் டயர்கள் சேதமாகி விடுகின்றன. எனவே, பாதாள
சாக்கடை மூடிகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
