ADDED : ஜூலை 08, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, தண்ணீர்பள்ளியில் தென்கரை பாசன வாய்க்கால் தென்கரையில் அமைந்துள்ள, பக்த ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை தண்ணீர் பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புனித தண்ணீர் எடுத்து வரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தை, யாகசாலையில் வைத்து பட்டாச்சாரியார்கள் இரண்டு கால பூஜை செய்தனர். நேற்று காலை, 6:30 மணியளவில் கோபுர கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
ஏராளமானோர் பங்கேற்றனர்.