/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம்
/
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம்
ADDED : நவ 06, 2025 01:05 AM
கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அன்னாபி ேஷக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில், அனைத்து சிவாலயங்களிலும், அன்னாபிேஷகம் விழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மாலை, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மூலவர் பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரிய மாலீஸ்வரர் சிலைகளுக்கும், கரூர் உழவர் சந்தை எதிரே, விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவருக்கும் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு, அன்னாபிேஷகம் நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், திருகாடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில்களிலும் மூலவருக்கு, அபி ேஷகம் நடத்தப்பட்டு, அன்னாபிேஷகம் செய்யப்
பட்டது.
* குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை பவுர்ணமியையொட்டி லிங்கத்திற்கும் நந்தீஸ்வரருக்கும் தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சி சுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராவமிதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் பக்தர்கள் வழங்கிய அரிசியில், சாதம் தயார் செய்து லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. நுாற்றுக்கணக்கானேர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

