/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி மேம்பால சாலையில் குப்பை தேக்கத்தால் மக்கள் அவதி
/
சிந்தலவாடி மேம்பால சாலையில் குப்பை தேக்கத்தால் மக்கள் அவதி
சிந்தலவாடி மேம்பால சாலையில் குப்பை தேக்கத்தால் மக்கள் அவதி
சிந்தலவாடி மேம்பால சாலையில் குப்பை தேக்கத்தால் மக்கள் அவதி
ADDED : நவ 06, 2025 01:04 AM
கிருஷ்ணராயபுரம்,சிந்தலவாடி மேம்பால சாலையில், அதிகளவில் குப்பை தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி, பழைய மேம்பாலம் செல்லும் சாலை அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பை தரம் பிரிக்கும் இடம் உள்ளது. இந்த இடத்தில் பஞ்.,களில் இருந்து சேகரித்து வரும் குப்பைகள் கொட்டப்படுகிறது.
பின், தரம் பிரிக்கப்பட்டு தேவையில்லாத குப்பை எரிக்கப்படுகிறது. தற்போது, வார்டுகளில் சேகரித்து கொண்டுவரப்பட்ட குப்பைகள் அதிகம் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்
பட்டுள்ளது.
சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குப்பைகள், கோழி கழிவுகளால் வீசும் துர்நாற்றம் காரணமாக சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, பஞ்., நிர்வாகம் தேவையில்லாத குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.