அண்ணாதுரை பிறந்த நாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
அண்ணாதுரை பிறந்த நாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2026 06:56 AM
கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, வெங்கமேட்டில் நடந்தது.
அதில், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரது சிலைகளுக்கு, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர்கள் மல்லிகா, முத்து, பொருளாளர் கண்ணதாசன், பகுதி செயலாளர் காமராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். * கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட், மனோகரா ரவுண்டானா அருகே, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது. இதில், அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ தலைமையில், நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குளித்தலை தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், மாநகர செயலர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணராயபுரத்தில், கிழக்கு ஒன்றிய ம.தி.மு.க., செயலாளர் பொன்னம்பலம் தலைமையில், அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வேங்காம்பட்டி கடைவீதியில் உள்ள அண்ணாதுரை படத்திற்கு மலர்கள் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் முத்து, அவைத்தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
