ADDED : செப் 16, 2026 06:57 AM
கரூர்:தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், கூடலுார் பஞ்., பெரியராசாப்பட்டி பகுதியில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ், 9.85 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி, பேரூர் உடையாபட்டியில், 2.84 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணி, தளிஞ்சி, ரெங்காச்சிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் சமையலறை, உணவு உண்ணும் இடம், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார். தளிஞ்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.தோகைமலை பஞ்., கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளிவாடி சாலை முதல், திருமநாயக்கம்பட்டி வரை புதிய சாலை அமைக்கும் பணி, விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ், 10.44 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளப்பட்டி மயானம் அருகே புதிய குளம் அமைக்கும் பணி, டி.இடையபட்டியில், 13.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் ரேஷன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். எ.நடுப்பட்டி பகுதியில், நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் பராமரிக்கும் பணி, வடசேரி பஞ்.,ல், 19.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டட கட்டுமான பணிகள் என மொத்தம், 1.93 கோடி ரூபாய் மதிப்பில், 7 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
