/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.குறிச்சியில் அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம்
/
அ.குறிச்சியில் அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம்
ADDED : செப் 22, 2024 06:22 AM
அரவக்குறிச்சி: ரவக்குறிச்சி அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின், 116வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நடந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தேர்தலின் போது, கூட்டுறவு வங்கியில் வைத்துள்ள, 5 பவுன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என, கூறினர். ஆனால், விதிமுறை எனக்கூறி, பெரும்பாலானோருக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின், 'கரன்ட்டை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால், அ.தி.முக., ஆட்சியில் கரன்ட் என, கேட்டாலே ஷாக் அடிக்கும்' என்றார். தற்போது, இரவு துாங்கும் போது கரன்ட் என, நினைத்தாலே ஷாக் அடிக்கும் நிலைமை உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும் என, ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், தற்போது என்ன ஆனது?
இன்னும், 18 அமாவாசைக்குள், தி.மு.க., ஆட்சி இருக்காது. தமிழகத்தில் போதை கலாசாரம், லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது இது தான், தி.மு.க., ஆட்சியின் அவல நிலை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், தி.மு.க.,வை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக்கொண்டனர்