/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா
/
ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 13, 2025 03:08 AM
குளித்தலை: நெய்தலுார், இந்திரா காலனியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதி-ராவிடர் நலக்குழு உறுப்பினர் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு தலைவி சித்ரா வாசுதேவன், உழவர் மன்ற உறுப்பினர்
ஆனந்த், விரிவுரையாளர் முத்துராஜ், வடசேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) வீரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் தனலட்-சுமி ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் பெரியநாயகி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பாக பணியாற்றி, 100 சத-வீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்கள், 100 சதவீதம் வருகை தந்த மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஓட்டம், நீளம் தாண்டுதல், கோகோ, பேச்சு போட்டி, ஓவியம், கவிதை, திருக்குறள், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

