/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
/
லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 20, 2024 02:34 AM
கரூர்: க.பரமத்தியில், அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் சார்பில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
சீட்டா நிறுவனர் பாபு தலைமை வகித்தார். லஞ்சம் இல்லாத கரூர் மாவட்டமாக உருவாக்க, பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வரும் நாட்களில் வீட்டிற்கு ஒரு பயிற்சியாளர் வீதம், 150 பயிற்சியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இது குறித்த பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு செயலாளர் கதிர்வேல், கோட்ட ஒருங்கிருணைப்பாளர் சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்திரன், ரவி, நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.