/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை விழிப்புணர்வு பேரணி
/
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை விழிப்புணர்வு பேரணி
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை விழிப்புணர்வு பேரணி
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 02, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி புகழூரில் நடந்தது.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியை, கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி., அம்புரோஸ் ஜெயராஜா தொடங்கி வைத்தார். பிறகு, மாணவர்கள் பங்கேற்ற பேரணி மலைவீதி ரவுண்டானா வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது.
பேரணியில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், தங்கமணி, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், எஸ்.ஐ., சுபாஷினி, பள்ளி தலைமையாசிரியர் விஜயன் உள்பட, பலர் பங்கேற்றனர்.