/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
/
ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 30, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பில், விழிப்புணர்வு குறித்த பேரணி நேற்று நடை
பெற்றது.
குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் வழியாக, சுங்ககேட் வரை சென்று மீண்டும் பள்ளியை
வந்தடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாணவிகள், ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம், ஊழலை ஒழிப்போம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு, கோஷம் எழுப்பியபடி சென்றனர். இன்ஸ்பெக்டர் உதயக்குமார், போக்குவரத்து போலீசார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கலந்து கொண்டனர்.