தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் கலைநிகழ்ச்சி

ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் கலைநிகழ்ச்சி

ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் கலைநிகழ்ச்சி


ADDED : அக் 29, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த, 26 முதல் வரும் நவ., 1 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மக்களிடையே லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. அதில், இந்தாண்டிற்கான மைய கருத்து நேர்மையே வளமை, லஞ்சம் கொடுப்பதும் மற்றும் வாங்குவதும் குற்றம், பொதுமக்கள் தங்களின் அரசு சார்ந்த பணிகளுக்கு யாரேனும் லஞ்சம் கேட்டால், கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டது.விழிப்புணர்வு முகாமில், கரூர் ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜான், இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் கலைக்குழுவை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us