/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்
/
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்
ADDED : டிச 29, 2024 01:03 AM
அரவக்குறிச்சி, டிச. 29-
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார். அரவக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடங்கி கடைவீதி, ஏ,வி.எம்., கார்னர், பஸ் ஸ்டாண்ட் வழியாக கல்லுாரியை அடைந்தது. ஊர்வலத்தில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
வக்கீல் முகமது அலி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.