ADDED : ஜூலை 01, 2026 05:40 AM

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதை பொருள்
பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் நவ்ஷாத்
தலைமை வகித்தார். அவர், போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க,
பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி நிகழ்ச்சியின் போது, போதை பொருட்களின் பயன்பாடு, தனிநபர் உடல் மற்றும் மனநலத்திற்கு மட்டுமின்றி,
குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக முதல்வர்
கூறினார். குறிப்பாக இளைஞர்கள் போதை பொருள் பழக்கங்களில் சிக்கிக்
கொள்ளாமல், கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புடன் வாழ வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
மேலும், போதை பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான
சமூகத்தை உருவாக்குவதில், மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
தங்களின் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் போதை பொருள் எதிர்ப்பு
விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
