/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் தவிப்பு
/
உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் தவிப்பு
ADDED : மே 16, 2025 01:24 AM
கரூர், தென்னிலை பஸ் ஸ்டாப்பில், உயர்மின் கோபுர விளக்கு எரியவில்லை என்பதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தென்னிலை கடைவீதி பஸ் ஸ்டாப் உள்ளது. இதில், தினமும் கரூருக்கு வேலைக்கு செல்லவும், கோவை, திருப்பூர் ஆகிய வெளியூர்களுக்கு செல்லவும் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்தாண்டு, உயர்மின் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. கடந்த நான்கு மாதங்களாக மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது.
விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். உயர்மின் கோபுர மின் விளக்குகளை பராமரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.