/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு வேண்டுகோள்
/
தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு வேண்டுகோள்
ADDED : நவ 28, 2025 01:19 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு வழங்கும் பிரதமர் கவுரவ ஊக்க தொகையை, விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என, இணைய வழியில் பதிவு செய்து, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வருகிறது. விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடைய கூடாது என்பதற்காக, ஒவ்வொரு விவசாயிக்கும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்கம் திட்டத்தின் கீழ் சுயவிபரம் பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள் மகளிர் திட்ட சமுதாய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் வாயிலாக, கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் பணி நடந்து வருகிறது.
அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே, விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள், பட்டா, ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி இவைகளை கொண்டு அரசு கள அலுவலர்
களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
ஆவணங்கள் சரி பார்த்தவுடன், விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். அவர்களுக்கு மட்டுமே ஊக்க தொகை வழங்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.

