/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாலாந்துார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
வாலாந்துார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 28, 2025 01:18 AM
குளித்தலை, சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
குளித்தலை அடுத்த வாலாந்துார் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலையின் இருபுறங்களிலும் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது. இவைகளை அகற்றி, கிராமத்திற்கு அரசு டவுன் பஸ்கள் வந்து செல்ல வேண்டுமென, கலெக்டருக்கு கிராம மக்கள் மற்றும் தி.மு.க., ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, வாலாந்துார் கிராமத்திற்கு டவுன் பஸ் வந்து செல்ல சாலை குறுகலாக இருப்பதாக, போக்குவரத்து துறையினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சாலையின் இரு புறங்களிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

