/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்பு செப்.,12க்குள் விண்ணப்பிக்கலாம்
/
மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்பு செப்.,12க்குள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்பு செப்.,12க்குள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்பு செப்.,12க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 07, 2025 01:19 AM
கரூர் ;கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்புக்கு செப்.,12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 2025-26ம் கல்வியாண்டில், டயாலிசிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன், தியேட்டர் டெக்னீசியன், எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான, 5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களுடன் வரும், 12 மாலை, 5:00 மணிக்குள் கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் காலியாக உள்ள, 79 இடங்களுக்கு போதிய விண்ணப்பங்கள் பெறப்படவில்லை எனில், நேரடி சேர்க்கை வரும், 20 முதல் 30 வரை நடக்கும். கல்விக்கட்டணமாக, 1,450 ரூபாய்- மட்டும் பெறப்படும். இது குறித்து கூடுதல் விபரங்களை 04324 - 242280 என்ற எண்ணிலோ அல்லது https://karurgmc.ac.in/course.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.