தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 10, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பத்தை, வரும் ஜூலை, 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கரூர் துணை பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம், கரூர் ஜவஹர் பஜாரில் துணை பயிற்சி நிலையம் செயல்படுகிறது. அதில், 2026-27ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை, www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நடந்து வருகிறது.

பயிற்சியில் சேர, 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை. எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய். பயிற்சி கட்டணம், 20,750 ரூபாய். விண்ணப்பங்கள் மற்றும் கட்டணம் இணைய வழி மூலம் செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், வரும் ஜூலை, 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆக., 3ல் பயிற்சி வகுப்பு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us