ADDED : ஜூன் 10, 2026 03:10 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; பொக்லைன் ஆப்பரேட்டர்.
இவர், கடந்த, 6 இரவு, 10:00 மணிக்கு, வீட்டில் இருந்தபோது,
வேங்காம்பட்டியை சேர்ந்த ராஜசேகர், 41, குளித்தலை தேவதானம் பகுதியை
சேர்ந்த தரணி, 18, மதன், 20, ரூபீஸ், 18, ஆகிய நால்வரும், ஒன்று சேர்ந்து
ராஜேந்திரனை வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி, தகாத வார்த்தையில் பேசி,
தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், குளித்தலை அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து
புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.
