/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்பனாசாவ்லா விருதுக்கு ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம்
/
கல்பனாசாவ்லா விருதுக்கு ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம்
கல்பனாசாவ்லா விருதுக்கு ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம்
கல்பனாசாவ்லா விருதுக்கு ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 23, 2025 01:10 AM
கரூர், கல்பனாசாவ்லா விருதுக்கு, ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சமூகநலத்துறை சார்பில், துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பதக்கத்துடன், 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை, சுதந்திர தின விழாவின் போது வழங்கப்பட உள்ளது. https://www.awards.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வரும் ஜூலை, 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன், கரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், விருதுக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின், துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.